search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதியின்றி மது விற்பனை"

    புன்னம்சத்திரத்தில் அனுமதியின்றி மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே ஜன வெளியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே மசக்கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

    இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு மணிகண்டன் மது விற்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    அதியமான்கோட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர்.
    தருமபுரி:

    அதியமான்கோட்டை போலீசாருக்கு அரசுக்கு புறம்பாக மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமா என்பவர் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    இதேபோன்று பென்னாகரம் போலீசார் நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த சத்தியா மற்றும் கணேசன் என்பவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    குமரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 168 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    திருவட்டார்:

    மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்படி நேற்று நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி, ஆகிய சப்-டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    ஆசாரிபள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ நாராயணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் ஆசாரிபள்ளத்தை அடுத்த வசந்தம் நகர் பகுதியில் வரும்போது, அங்கு முதியவர் ஒருவர் சந்தேகம் படும்படியக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் அதே பகுதியை அந்தோணி (வயது 67) என்பதும் அந்த பகுதியில் அனுமதி இன்றி மது விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 4 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தக்கலை மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தக்கலை பகுதியில் அனுமதி இன்றி மது விற்றதாக சுந்தரபாய் (47) என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அனந்தபத்மனாபபுரம் பகுதியில் வரும்போது அங்கு பாடலிங்கம் என்ற துரை (43) அனுமதி இன்றி மது விற்பதாக அவரை கைதுசெய்து அவரிடம் இருந்த 10 மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

    அருமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வல்சலம் அப்பகுதியில் போலீசாருடன் ரோந்து சென்றார். அப் போது அருமனை பஜாரில் அனுமதி இன்றி மது விற்றதாக மனோகரன் (58) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பூதப்பாண்டி, மார்த்தாண்டம், களியக்கா விளை, கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மது விற்றதாக 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 168 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    குலசேகரம் பகுதியில் தனியார் மதுபான பார் உள்ளது. நேற்று காந்தி நினைவு தினத்தையொட்டி மது விற்க அரசு தடை விதித்திருந்த போதிலும் அங்கு விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் கூறினர். மேலும் பாரின் அருகே மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளான தாக கூறினர். எனவே மாவட்ட நிர்வாகம் அரசு நிர்ணயித்த நேரத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், காந்தி நினைவு தினத்தன்று மது விற்பனை செய்த பார் மீது நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    தருமபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்ற 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் பகுதியில் அனுமதியின்றி திருட்டு தனமாக வீடு மற்றும் கடைகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது அதே பகுதியில் திருட்டு தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பழனியம்மாள், சின்னகண்ணு, முத்தம்மாள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி பெண்கள் சிறையில் அடைத்தனர்.  

    இதேபோல் பெரும்பாலை பகுதியில் அனுமதியின்றி மது விற்ற செவந்தான் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×